தேசியம்
செய்திகள்

B.C. வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர்?

British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர் பங்கேற்றிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Bank of Montreal வங்கியில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியின் போது சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் ஆறு பேர் காயமடைந்ததுடன் இரண்டு சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் மூன்றாவது சந்தேக நபர் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதில் காயமடைந்த காவல்துறையினரில் இருவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மூன்றாதவர் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.

British Colombia மாகாணத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காயம் அல்லது மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் சுயாதீன விசாரணை அலுவலகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கிறது.

சம்பவ இடத்தில் சந்தேக நபர்களுடன் தொடர்புடைய வாகனத்திற்குள் இருந்த வெடிபொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

 

Related posts

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

Lankathas Pathmanathan

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

Lankathas Pathmanathan

கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment