தேசியம்
செய்திகள்

British Colombia மாகாண முதல்வர் பதவி விலகல்

மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக British Colombia மாகாண முதல்வர் John Horgan அறிவித்தார்.

ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்துள்ள Horgan பதவி இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார்.

தனது ஆளும் கட்சியான NDPயை இந்த ஆண்டு இறுதியில் தலைமைத்துவ மாநாட்டை நடத்துமாறு Hogan கோரியுள்ளார்.

அவரது சமீபத்திய புற்றுநோய், Royal B.C அருங்காட்சியகம் தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய திட்டம் ஆகியவற்றுக்கும் மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது.

புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்கவுள்ளதாக Horgan கூறினார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக பொது சேவைக்காக Horganனுக்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

Related posts

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

Lankathas Pathmanathan

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

Lankathas Pathmanathan

Leave a Comment