கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் Justin Trudeau நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த வாரம் வெளியான ஒரு புதிய NATO அறிக்கை கனேடிய இராணுவ செலவினங்கள் தவறான திசையில் செல்வதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
ஏனைய NATO உறுப்பு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புச் செலவினங்களை மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமாக அதிகரிக்க கனடா 2014ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது.
ஆனால் திங்கட்கிழமை (27) NATO பொதுச் செயலாளர் வெளியிட்ட புதிய அறிக்கை, கனேடிய பாதுகாப்பு செலவுகள் உண்மையில் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காகக் குறையும் என மதிப்பிடுகிறது.
ஆனாலும் புதிய போர் விமானங்கள், வட அமெரிக்க பாதுகாப்புகளில் அதிக பணத்தை கனடா முதலீடு செய்கிறது என NATO உச்சி மாநாட்டிற்கு முன்னதாக Trudeau கூறினார்.