ரஷ்யா மீது புதிய தடைகளை பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (27) அறிவித்தார்.
மேலும் 74 நபர்களையும் வணிகங்களையும் கனடா தனது தடைகள் பட்டியலில் இணைத்துள்ளது.
உக்ரேனியர்கள் நிம்மதியாக வாழத் தகுதியானவர்கள் என்ற விடயத்தில் கனடா உறுதியாக உள்ளது என இந்த தடைகளை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் கூறினார்.
மூத்த ரஷ்ய அரசாங்க அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படும் அரசால் வழங்கப்படும் தவறான தகவல், பிரச்சார முகவர்களுக்கு எதிராகவும் தடைகளை கொண்டுவர கனேடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
திங்கட்கிழமை ஜேர்மனியில் ஏனைய G7 தலைவர்களை சந்தித்து உக்ரைன் படையெடுப்பால் உலக பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் Trudeau விவாதித்தார்.
G7 உச்சிமாநாட்டின் முதல் நாளில், Zelenskyyயிடம் Trudeau உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.