December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடவுச் சீட்டுக்காக எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது: அமைச்சர் Gould

கடவுச்சீட்டு செயலாக்கத் தாமதங்களை மிகவும் கடுமையான தாமதங்கள் எதிர்கொள்ளப்படும் முக்கிய நகர்ப்புற மையங்களில் அதிகரிக்க கடவுச்சீட்டு சேவைகளுக்கு பொறுப்பான அமைச்சர் Karina Gould உத்தரவிட்டுள்ளார்.

கடவுச் சீட்டுக்காக தற்போது எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறிய அமைச்சர் Gould, நிலைமையை சரி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

கடவுச்சீட்டுகளுக்கு பொறுப்பான service கனடா, தீவிரமான வாடிக்கையாளர்களை குறிவைக்கும் அணுகுமுறை நடவடிக்கைகளை செயல்படுத்தும் என குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சர் Gould கூறினார்.

இந்த நடவடிக்கை இந்த வாரம் Montrealலில் ஆரம்பமானது.

இந்த வழிமுறை Torontoவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் June 27 முதல் பிற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு, புள்ளியியல் திணைக்களம், கனடா வருவாய் முகாமை திணைக்களம் ஆகியவற்றின் பணியாளர்களும் கடவுட்சீட்டு செயலாக்க நடவடிக்கைளில் உதவுகின்றனர்.

Related posts

Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

பிரதமர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற அனுமதி

Gaya Raja

Ontarioவில் NDP பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்: Andrea Horwath நம்பிக்கை

Leave a Comment