தேசியம்
செய்திகள்

கடந்த பொதுத் தேர்தலில் 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை: கனடிய தேர்தல் திணைக்களம்

கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என கனடிய தேர்தல் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்தது.

இவற்றில் பெரும்பாலானவை காலக்கெடுவிற்கு பின்னர் தேர்தல் திணைக்களத்தை சென்றடைந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது.

September 21ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தபால் மூலம் சிறப்பு வாக்குச் சீட்டுகளை கோரியிருந்தனர்.

2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையில் 82 சதவீதம் அதிகரிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து உட்பட 1.1 மில்லியனுக்கும் அதிகமான சிறப்பு வாக்குச் சீட்டுகள் இம்முறை பெறப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

Related posts

முதன்முறையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்த Ontario!

Lankathas Pathmanathan

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan

பயங்கரவாத பட்டியலில் இணைகின்றன மேலும் சில அமைப்புகள்!

Gaya Raja

Leave a Comment