வட அமெரிக்க பாதுகாப்புகளை நவீனப்படுத்த 40 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக கனடா திங்கட்கிழமை (20) அறிவித்தது.
வட அமெரிக்காவின் தற்காப்பு அமைப்புகளை நவீனமயமாக்க அடுத்த 20 ஆண்டுகளில் 40 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்தார்.
இதில் அடுத்த ஆறு ஆண்டுகளில் கனடா 4.9 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக திங்களன்று அமைச்சர் ஆனந்த் அறிவித்தார்.
NORAD நான்கு தசாப்தங்களில் எதிர்கொள்ளும் மிகவும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் இது என Trenton கனடியப் படைகளின் தளத்தில் அமைச்சர் கூறினார்.