20 வயதுக்கு உட்பட்ட இரு ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை Parti Québécois முன்னாள் தலைவர் André Boisclair திங்கட்கிழமை (20) ஒப்புக் கொண்டார்.
தனது Montreal தொடர் மாடிக் கட்டிடத்தில் January 2014, November 2015 இல் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக Boisclair ஒப்புக் கொண்டார்.
முன்னாள் அரசியல்வாதியுடன் அவர்களின் சந்திப்புகள் தங்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு விவரித்தனர்.
இந்த வழக்கில் தண்டனையை July 18 அன்று அறிவிப்பதாக Quebec நீதிமன்ற நீதிபதி Pierre Labelle கூறினார்.
இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இருவரின் அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.