தேசியம்
செய்திகள்

கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார்: Conservative இடைக்கால தலைவர்

கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார் என Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen குற்றம் சாட்டினார்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் கையாளுதல், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துதல், COVID கட்டுப்பாடுகளை நீக்குவதில் தயக்கம் காட்டுதல் போன்றவற்றிற்காக Justin Trudeau அரசாங்கத்தின் மீது அவர் குற்றம் சாட்டினார்.
புதன்கிழமை (15) காலை  நாடாளுமன்ற வளாகத்தில் Conservative கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் Bergen இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 Conservative கட்சி 6 இலட்சம் கட்சி உறுப்பினர்களை இணைத்துள்ளதாகவும் தனது உரையில் Bergen குறிப்பிட்டார்.

கோடைக் கால விடுமுறைக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப் படுவதற்கு இன்னும் ஒரு வாரம் மாத்திரமே உள்ளது.

மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் September மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் Conservative கட்சி தனது புதிய நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளது.

Related posts

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்கம் குறைந்தது!

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment