தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (14) இரவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலியானவர் 28 வயதான விஜயாலயன் மதியழகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்கலாம் மரணமடைந்தார்.
Ontario மாகாண காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக Ottawa காவல்துறை புதின்கிழமை காலை தெரிவித்தது.
இலங்கையில் பிறந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே Ottawa காவல்துறையில் கடமையில் இணைந்தவராவார்.
இவரது மறைவு காரணமாக அனைத்து Ottawa காவல்துறை கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
இவர் காவல்துறையில் பணியாற்றுவதற்கு முன்னர் கனேடிய இராணுத்தி்ல் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.