ஊதியங்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் வேலையற்றோர் விகிதம் குறைவடைகின்றது.
கடந்த மாதத்தில் 40 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தது.
இந்த நிலையில் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இது 1976 ஆம் ஆண்டின் பின்னராக மிகக் குறைந்த வேலையற்றோர் விகிதமாகும்.
April மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக இருந்தது.
கடந்த மாதத்தில் ஊழியர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
April மாதத்தில் இந்த ஊதிய அதிகரிப்பு 3.3 சதவீதமாக இருந்தது.