விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களை குறைக்க மத்திய அரசு புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra புதன்கிழமை (08) தெரிவித்தார்.
விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், பொது சுகாதார அதிகாரிகள், மத்திய அரசாங்க அதிகாரிகளை உள்ளடக்கிய பணிக்குழுக்கள் வாரத்திற்கு மூன்று முறை கூடி இந்த விடயத்தில் தீர்வு காண முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனாலும் மாற்றங்கள் எப்போது எதிர்பார்க்கப்படுகின்றன என்பது குறித்த அறிவித்தலை வெளியிட தயாராக இல்லை என அமைச்சர் Alghabra தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தாமதங்கள் உலகம் முழுவதும் எதிர்கொள்ள படுவதாகவும் செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் கூறினார் .
இதேவேளை இந்த தாமதங்களை எதிர்கொள்ளும் வகையில் கனடாவின் எல்லை பாதுகாப்பு மையம், கனேடிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் ஆகியன புதிய ஊழியர்களை பணியமர்த்துவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார்.