தேசியம்
செய்திகள்

Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கியுள்ளனர்!

Conservative கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை Pierre Poilievreக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

Hamilton நாடாளுமன்ற உறுப்பினர் Dan Muys, Dufferin-Caledon நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் செவ்வாய்கிழமை இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் Brownனின் வேட்புமனுவை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாக குறைவடைந்துள்ளது.

Poilievreக்கு 56 நாடாளுமன்ற உறுப்பினர்களும் Jean Charestக் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Poilievreரின் பிரச்சார குழு 312,000 கட்சி உறுப்பினர்களையும், Brownனின் குழு 150,000 கட்சி உறுப்பினர்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 600,000 கட்சி உறுப்பினர்கள் September மாதம் நடைபெறும் தலைமைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என Conservative கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரும் முன்னாள் Alberta முதல்வரின் முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment