தேசியம்
செய்திகள்

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Ontarioவில் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் காலாவதியாகிறது.
எதிர்வரும் சனிக்கிழமை (11) நள்ளிரவுடன் இந்த முகமூடி கட்டுப்பாடுகள் Ontarioவில் காலாவதியாகிறது.
இதன் மூலம் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  நடைமுறையில் இருந்த பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றது
இந்த நிலையில் தலைமை சுகாதார அதிகாரி  Dr. Kieran Moore, தற்போது மாகாணம் முழுவதும் உள்ள முக்கிய குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்து கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, Ontarioவில் இப்போது 526 பேர் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
COVID காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இருந்து சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Ontario, Quebec, Saskatchewan, Manitoba மாகாணங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம்

Lankathas Pathmanathan

Ontario மருத்துவமனைகளில் அதிகரிக்கும் COVID தொற்றாளர்கள் அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment