ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் பங்கேற்கும் கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை ஆத்திரமூட்டுபவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதற்காக Pacific பெருங்கடலில் பலதரப்பு ஐ.நா. பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய விமானங்கள் மீதான சீனாவின் நடவடிக்கைகளை Trudeau திங்கட்கிழமை (06) கண்டித்தார்.
சீன விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் கனேடியர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் கனேடிய இராணுவம் கடந்த வாரம் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் வடகொரியாவின் பொருளாதார தடைகளை முறியடிப்பதை கண்காணித்து வரும் வான் ரோந்துகள் குறித்து கனடாவை சீனா எச்சரித்துள்ளது.
இந்த ஆத்திரமூட்டலின் கடுமையான விளைவுகள் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கனடாவை எச்சரித்தது.