துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகளை York பிராந்திய காவல்துறையினர் பதிவு செய்தனர்.
Whitby நகரை சேர்ந்த 23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன், Markham நகரை சேர்ந்த 24 வயதான கமீஷா கமலநாதன் ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
Markham குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தரித்து நின்ற வாகனம் குறித்த விசாரணையில் துப்பாக்கிகளையும் போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
May மாதம் 30ஆம் திகதி இரவு 10:40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதனை தொடர்ந்து Markham நகர இல்லமொன்றில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் வெடிமருந்துகளின் கண்டுபிடிக்கப்பட்டது.