வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Doug Ford தலைமயிலான Progressive Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.
கடந்த ஞாயிறு (29) முதல் செவ்வாய் (31) வரை நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பின்படி, Ford தலைமையிலான PC கட்சி வாக்களிக்க முடிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே 38.8 சதவீத ஆதரவை பெற்றுள்ளது.
அதேசமயம், Liberal கட்சிக்கு 26.3 சதவீத ஆதரவு, NDPக்கு 24.7 சதவீத ஆதரவு உள்ளது.
இந்த தேர்தலில் PC கட்சி 76 ஆசனங்கள் வரை வெற்றி பெறலாம் எனவும் குறைந்து 58, கூடியது 81 ஆசனங்களை PC கட்சி பெறும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது.
NDP 24 ஆசனங்கள் வரை வெற்றி பெறலாம் எனவும் குறைந்து 18, கூடியது 34 ஆசனங்களை NDP பெறும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது.
Liberal கட்சி 22 ஆசனங்கள் வரை வெற்றி பெறலாம் எனவும் குறைந்து 17, கூடியது 40 ஆசனங்களை Liberal கட்சி பெறும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது.
பசுமை கட்சி 2 ஆசனங்கள் வரை வெற்றி பெறலாம் எனவும் குறைந்து 1, கூடியது 7 ஆசனங்களை பசுமை கட்சி பெறும் எனவும் கருத்து கணிப்பு கூறுகிறது
இந்த தேர்தலில் மொத்தம் ஆறு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
Progressive Conservative கட்சியின் சார்பில் விஜய் தணிகாசலம் Scarborough – Rouge Park தொகுதியிலும், லோகன் கணபதி Markham – Thornhill தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் நீதன் சான் Scarborough Centre தொகுதியிலும், செந்தில் மகாலிங்கம் Markham – Unionville தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
Liberal கட்சியின் சார்பில் அனிதா ஆனந்தராஜன் Scarborough North தொகுதியிலும், பசுமை கட்சியின் சார்பில் சாந்தா சுந்தரேசன் Markham-Unionville தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.