தேசியம்
செய்திகள்

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

கடந்த வார விடுமுறையில் பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் மின் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடைமை சேதங்கள் ஏற்பட்டதுடன் மின் தடைகளும் அறிவிக்கப்பட்டன.

மின் இணைப்புக்கான மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான Ontario குடியிருப்பாளர்கள் வியாழக்கிழமையும் (27) மின்சாரம் பெறாத நிலை தொடர்கின்றது.

சுமார் 68 ஆயிரம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில் வியாழனன்றும் உள்ளனர் என Hydro One கூறியது

இவர்களில் Bancroft, Perth, Tweed பகுதிகளில் பல நாட்களுக்கு மின்சாரம் மீள கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

45 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக Hydro Ottawa கூறியது.

ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் மின்சாரத்தை மீண்டும் பெறுவார்கள் என கூறப்படுகிறது

அதேவேளை இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்தது.

Municipality of Marmora & Lake பகுதியில் 58 வயதுடைய ஒருவர் மரம் விழுந்ததில் பலியானதாக Ontario மாகாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

புயல் காரணமாக இறந்த 11 பேரில் 9 பேர் மரங்கள் விழுந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

புயலின் காரணமாக முறிந்த மரக்கிளை ஞாயிற்றுக்கிழமை விழுந்த போது பத்தாவது மரணம் நிகழ்ந்தது

Quebecகில் புயலின் மத்தியில் படகு கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Related posts

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontario மாகாண பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Lankathas Pathmanathan

Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment