சீன தொலைத் தொடர்பு நிறுவனமான Huawei, ZTE ஆகியவற்றை 5G வலைப் பின்னல்களில் இருந்து கனடா தடை செய்கிறது.
புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne , பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (19) வெளியிட்டனர்.
கனடாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் எந்தவொரு தயாரிப்புகளையும் சேவைகளையும் தங்கள் வலைப் பின்னல்களில் இணைக்க அனுமதிக்கப்படாது என தமது அறிவித்தலில் அமைச்சர்கள் கூறினர்.
தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி இந்த முடிவை கனடா எடுத்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சட்டத்தை அமுலாக்கம் செய்யவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.