மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அமைச்சர் Stephen Lecce விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
NDP கட்சியின் வேட்பாளர்கள் பலர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
PC கட்சியும், தலைவர் Doug Fordஉம் அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் அடிமை ஏலத்தில் பங்கேற்றதற்காக Lecce மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண கல்வி அமைச்சரான Lecce, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நேற்றிரவு மன்னிப்பு கோரியுள்ளார்.
2006இல் நடந்த இந்த நிகழ்வு குறித்து மன்னிப்பு கோருவதாக ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
நடைபெற்றவுள்ள தேர்தலில் King-Vaughan தொகுதியில் Lecce போட்டியிடுகின்றார்