கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் கனேடியர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly குற்றம் சாட்டினார்.
ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என Joly கூறினார்.
கனடிய அரசாங்கத்திற்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையே அதிகரித்து வரும் கருத்து வேறுபாடு குறித்து அமைச்சர் Joly விவரித்தார்.
ரஷ்ய ஜனாதிபதியின் போர் குறித்த தவறான பிரச்சாரத்தை கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் வெளியிடுவதாக Joly மேலும் கூறினார்.