ஒரு பயங்கரவாத குழுவில் செயற்பாட்டதற்காக Windsor Ontarioவை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு February முதல் May வரையிலான காலப்பகுதியில் இவர் Windsor பகுதியில் பல்வேறு வெறுப்புணர்வை தூண்டும் குற்றங்களை இழைத்ததாக RCMP கூறுகிறது.
19 வயதான Seth Bertrand என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.
இவர் மீது சமூக மையம் ஒன்றை நாசப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே Windsor காவல்துறையினர் பதிவு செய்திருந்தனர்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.