Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வருகிறது.
Quebecகின் தலைமை பொது சுகாதார அதிகாரி புதன்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
COVID தொற்றின் ஆறாவது அலையின் உச்சம் Quebec மாகாணத்தை கடந்து விட்டதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் உட்புற பொது இடங்களுக்கான முகமூடி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர மாகாணம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் பொது போக்குவரத்துகளிலும் சுகாதார நிலையங்களிலும் முகமூடி அணிவது தொடர்ந்து கட்டாயமாக்கப்படும்.