Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமாகியது.
அரசியல் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Progressive Conservative கட்சித் தலைவர்r Doug Ford தனது பிரச்சாரத்தை Brampton நகரில் ஆரம்பிக்கின்றார்.
இன்றைய நிலையில் கருத்துக் கணிப்புகள் Ford தலைமையிலான PC கட்சி, மீண்டும் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் என எதிர்வு கூறுகின்றது .
மாகாண சபையில் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் NDP தலைவி Andrea Horwath, PC கட்சியின் மூன்று தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இவற்றில் தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியும் ஒன்றாகும்.
நீதன் சானின் பிரச்சார அலுவலகத்தில் புதன்கிழமை (04) மதியம் 12:45க்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது
Liberal தலைவர் Steven Del Duca தனது பிரச்சாரத்தை Etobicoke Centre தொகுதியில் ஆரம்பிக்கின்றார்.
தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள Liberal கட்சி, NDPயை பின்னிலை படுத்தி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன