ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கனடிய அரசின் பதில் நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை(28) மேலவை சபையின் வெளியுறவுக் குழு முன் Joly விளக்கமளித்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஒரு தோல்வியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வரை கனடா தனது முயற்சிகளை நிறுத்தாது எனவும் அமைச்சர் Joly கூறினார்.
அதேவேளை உக்ரைனில் உள்ள கனடிய தூதரகம் அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் என அமைச்சர் Joly தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.