தேசியம்
செய்திகள்

வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் கைது

Durham நகரில் வீட்டு மேம்பாட்டுத் திட்டங்களில் மோசடி தொடர்பான விசாரணையில் தமிழர் ஒருவர் கைதாகியுள்ளார்.

கடந்த வருடம் June மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் Ajax நகரை சேர்ந்த 31 வயதான ஜனார்த்தனன் சத்தியநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Trusted Remodeling என்ற வீட்டு மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக மூவர் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களிடம் 28 ஆயிரம் டொலர்களுக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டில்  ஒன்பது குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இவர் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்கும் New York ?

Lankathas Pathmanathan

COPA அமெரிக்கா: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கனடா தோல்வி

Lankathas Pathmanathan

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan

Leave a Comment