COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
Twitter மூலம் தான் தொற்றால் பாதிக்கப்பட்டதை Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அறிவித்திருந்தார்.
மூன்று COVID தடுப்பூசிகளையும் பெற்றதனால் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இதுவரை மூன்று தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் தாமதிக்காமல் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறு கரி ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.