தேசியம்
செய்திகள்

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Washingtonனில் நடைபெற்ற G20 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய அதிகாரிகள் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர் என கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland  தெரிவித்தார்.

புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்ட ரஷ்ய அதிகாரிகளிடம் Freeland இந்த கருத்தை நேரடியாக முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனிடன் ரஷ்ய அதிகாரிகள் பேச முயற்சிக்க வேண்டும் எனவும் Freeland கூறியுள்ளார்.
அதேவேளை இந்த கூட்டத்தில் ரஷ்யாவின்  பங்கேற்பை எதிர்த்து துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Freeland உள்ளிட்ட கனேடிய அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

புதன்கிழமை நடைபெற்ற G20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் உரையாற்ற முனைந்தபோது இந்த வெளிநடப்பு நிகழ்ந்தது.

இந்தக் கூட்டங்களில் ரஷ்யா பங்கேற்க அல்லது இணைக்கப்பட கூடாது என தனது முடிவு குறித்து  Freeland கூறினார்

G20 இல் ரஷ்யாவின் பங்கேற்பு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் Justin Trudeau, வெளியுறவு அமைச்சர் Melanie Joly  உள்ளிட்ட கனேடிய அதிகாரிகள் ஏற்கனவே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண இடைத் தேர்தலில் PC வெற்றி!

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

மேலாண்மை ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கனடா Post

Lankathas Pathmanathan

Leave a Comment