February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை (key interest rate) 1 சதவீதமாக புதன்கிழமை (13) உயர்த்தியது.

20 ஆண்டுகளுக்கு பின்னர் மிக உயர்ந்த தொகையால் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை உயர்த்தியுள்ளது.

மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை (policy interest rate) அரை சதவீதம் அதிகரித்து ஒரு சதவீதமாக உயர்த்தியது.

கடந்த 2020ஆம் ஆண்டு May மாதம் இறுதியாக மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தியது

வங்கியின் இந்த அதிகரிப்பு கனடாவின் பெரிய வங்கிகள் தங்கள் முதன்மை விகிதங்களை உயர்த்த தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அதிக பணவீக்க நிலைகளுக்கான புதிய கணிப்புகளுக்கு மத்தியில் மேலும் வட்டி விகித உயர்வுகள் வெளியாகும் எனவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment