தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் தொடரும் பனி புயல்

Manitoba, Saskatchewan, வடக்கு Ontario மாகாணங்களை ஒரு பெரும் பனி புயல் தொடர்ந்தும் தாக்குகிறது.

செய்வாய்கிழமை (12) பின்னிரவு ஆரம்பமான இந்த புயல்வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்தும் பெரும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதுடன், வலுவான காற்று வீசும் என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

இது பல தசாப்தங்களில் மோசமான பனி புயல்களில் ஒன்றாக இருக்கலாம் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கிறது.

இந்த புயல் நிறைவுக்கு வரும் போது 30 முதல் 60 சென்டிமீட்டர் பனி பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக பல நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

அதேவேளை மின்வெட்டுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

குறைவான நன்கொடைகளை பெறும் உணவு வங்கிகள்

Lankathas Pathmanathan

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

Leave a Comment