Manitoba பெரும் பனிப்புயல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்தது.
Winnipeg உட்பட தெற்கு Manitobaவின் பல பகுதிகளுக்கு குளிர்கால புயல் கண்காணிப்பை வானிலை நிறுவனம் திங்கட்கிழமை (11) வெளியிட்டது.
தெற்கு Manitobaவில் பல தசாப்தங்களில் மிக மோசமானதாகதொரு பனி புயல் இந்த வாரம் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்த பனிப்புயல் தெற்கு Manitoba, தென்கிழக்கு Saskatchewan பகுதியை இந்த வாரத்தின் நடுப்பகுதியில் தாக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
புதன்கிழமை ஆரம்பமாகும் இந்த பனி புயல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடரும் என கூறப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை காலைக்குள் 30 முதல் 80 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.