பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியதான குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வியாழக்கிழமை (07) மாலை ஒரு பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 39 வயதான காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Torontoவைச் சேர்ந்த Constable Sameer Kara என்பவர் கைது செய்யப்பட்டு ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இவர் Toronto காவல்துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர்.
சம்பவத்தின் போது Kara பணியில் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் காவல்துறை சேவைகள் சட்டத்தின்படி ஊதியத்துடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Kara ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாலியல் வன்கொடுமை விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது