December 12, 2024
தேசியம்
செய்திகள்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரி கனடாவில் போராட்டம்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் British Colombia மாகாணத்தின் Vancouver நகரில் நடைபெற்றது.

Vancouver நகரின் downtown பகுதியில் ஒன்றுகூடிய 200 இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி, மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண உதவுமாறும் பேரணியில் பங்கேற்றவர்கள் கனடாவை வலியுறுத்தினர்.

இலங்கைக்கான பயண ஆலோசனை ஒன்றை கனடிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்

கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment