ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும் என கனடா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கோரியுள்ளது.
ரஷ்யா மனித உரிமைகள் பேரவையில் அமரக்கூடாது என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly செவ்வாய்க்கிழமை (05) கூறினார்.
உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைத்துள்ளதாக Joly தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமித்ததன் மூலம் இழைத்த போர்க் குற்றங்கள் காரணமாக மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் தொடரும் ரஷ்யப் படைகளின் கொடூரமான வன்முறைச் செயல்கள் மனித உரிமைகளை ரஷ்யா முற்றிலும் புறக்கணிப்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது என அமைச்சர் Joly குறிப்பிட்டார்.