December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியை அடையாளம் காண்பதற்கான தேர்வு செயல்முறையை பிரதமர் Justin Trudeau ஆரம்பித்துள்ளார்.

விரைவில் ஓய்வுபெறும் நீதிபதி Michael Moldaverவின் இடத்தை புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி நிரப்புவார்.

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் May 13 வரை விண்ணப்பிக்கலாம் என இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப காலம் முடிவடைந்தவுடன், ஆலோசனைக் குழு, தகுந்த வேட்பாளர்களின் குறுகிய பட்டியலை பரிசீலனைக்கு பிரதமரிடம் சமர்ப்பிக்கும்.

Prince Edward தீவின் முன்னாள் முதல்வர் Wade MacLauchlan, கனடாவின் உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை நியமனங்களுக்கான சுயாதீன ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

 தங்கம் வென்ற கனடிய மகளிர்  Hockey அணி!

Gaya Raja

Leave a Comment