இலங்கை பயண ஆலோசனை ஒன்றை கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமை காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடியர்கள் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
April 1, 2022 அன்று, கொழும்பில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இந்த அவசரகாலச் சட்டம், பிடியாணை இல்லாமல் தனிநபர்களை கைது செய்யும் அதிகாரத்தை உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கும். எதிர்வரும் நாட்களில் கொழும்பிலும் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. April 2 மாலை 6 மணி முதல் April 4, 2022 காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. குறிப்பாக கொழும்பில் ஊரடங்குச் சட்டம் குறுகிய கால அறிவிப்பில் விதிக்கப்படும் நிலை உள்ளது.
இலங்கையில் உள்ள கனடியர்கள்:
- அதிகரித்த பாதுகாப்பு நடவடிகளை எதிர்பார்க்கவும்
- உள்ளூர் ஊடகங்கள் மூலம் உருவாகி வரும் சூழ்நிலையை அறிந்துகொள்ளவும்
- ஆர்ப்பாட்டங்கள், பெரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும்
- உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றவும்
மேலதிக விபரங்களுக்கு
https://travel.gc.ca/destinations/sri-lanka?fbclid=IwAR0gaUIawydv9vjdaiI83weyNBL0d1cZmyI36RsLQldpUn53nNDHBNXkC8M