வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் Justin Trudeau பல மில்லியன் டாலர் நிதி உதவியை புதன்கிழமை (30) அறிவித்தார்.
வதிவிட பாடசாலை இறப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் British Colombia மாகாண Williams Lake முதற் குடியிருப்பு பிரதேசத்திற்கு புதன்கிழமை பிரதமர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது வதிவிட பாடசாலை இறப்புகள் குறித்து விசாரணைக்கு மேலதிகமாக 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி பிரதமரினால் அறிவிக்கப்பட்டது.
குடியிருப்புப் பாடசாலைகளின் கல்வி கற்றபோது பாதிக்கப்பட்ட முதற்குடி சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குணப்படுத்துதலைத் தொடர இந்த நிதி உபயோகிக்கப்படவுள்ளது.
இது இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய அரசால் வழங்கப்பட்ட 1.4 மில்லியன் டொலர் நிதி உதவியை விட கூடுதலான பங்களிப்பாகும்.