December 12, 2024
தேசியம்
செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Ontario மாகாண Progressive Conservative கட்சியின் உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை (25) ஆரம்பித்தார்.

தமிழ் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அவரது தொகுதியில் வெள்ளியன்று திறக்கப்பட்டது.

இதன் மூலம் மீள் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார்.

மீண்டும் Scarborough – Rouge Park தொகுதியின் Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார்.

இந்த பிரச்சார ஆரம்பத்திலும் அலுவலக திறப்பு விழாவிலும், Ontario மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Ontario மாகாண சபை தேர்தல் June மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Lankathas Pathmanathan

Leave a Comment