British Colombiaவில் அதிகரித்த எரிபொருள் விலையால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் விரைவில் மாகாணத்திலிருந்து தள்ளுபடி கட்டணம் ஒன்றை பெறுவார்கள் என முதல்வர் John Horgan தெரிவித்தார்.
கடந்த மாதம் British Columbia மாகாணத்தில் அடிப்படை வாகன காப்புறுதி பெற்ற பெரும்பாலான ஓட்டுநர்கள் 110 டொலர் கட்டணத்தைப் பெறுவார்கள் என Horgan கூறினார்.
வணிக வாகன காப்புறுதி பெற்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 165 டொலர் கட்டணம் பெறுவார்கள் எனவும் வெள்ளிக்கிழமை (25) அறிவிக்கப்பட்டது.
தாமதங்களை தவிர்ப்பதற்காக வாகன வகைகளின் அடிப்படையில் தள்ளுபடிகள் பிரிக்கப்படவில்லை என முதல்வர் அலுவலகம் கூறியது.
பல Vancouver எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எரிபொருளின் விலை லிட்டருக்கு 214.9 சதமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.