தேசியம்
செய்திகள்

CP ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

CP புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

CP புகையிரத நிறுவனமும் தொழிற்சங்கமும் இறுதி மத்தியஸ்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில் தொழிலாளர்கள் தமது பணிக்கு திரும்பினர்.

வார இறுதியில் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி மத்தியஸ்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை அறிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களின் நலனுக்கு சார்பாக  விதிமுறைகள், நிபந்தனைகளை பேச்சுவார்த்தை மூலம் எட்ட முடிந்ததாக தொழிற்சங்க பேச்சாளர் தெரிவித்தார்.

கனடா முழுவதும் வழமையான புகையிரத செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக CP தலைமை நிர்வாகி கூறினார்.

Related posts

பாடசாலை செலவை ஈடு செய்ய பெற்றோருக்கு உதவி தொகையை Ontario அறிவித்தது

Lankathas Pathmanathan

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja

கட்சியின் தலைமையில் நீடிப்பதற்கான ஆதரவு உள்ளது: O’Toole!

Gaya Raja

Leave a Comment