தேசியம்
செய்திகள்

Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement

புதிய ஜனநாயக கட்சியுடனான Liberal கட்சியின் புதிய ஒப்பந்தம் Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் தொடரும் நிலையை உருவாக்கியுள்ளது.

Trudeau அரசாங்கத்தை ஆட்சியில் வைத்திருக்கும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை Liberal, NDP கட்சிகள் எட்டியுள்ளன.

Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement என இந்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை (22) இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் Trudeau, செய்தியாளர்களிடம் விவரித்தார்.

நீண்டகால NDP முன்னுரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஈடாக, பிரதமர் Trudeauவின் அரசாங்கம் 2025 வரை ஆட்சியில் நிலைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

June 2025 வரை இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் என பிரதமர் கூறினார்.

நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் கனேடியர்களுக்கு தகுதியானவற்றை வழங்குவதில் நமது வேறுபாடுகள் தடையாக இருக்க முடியாது என Trudeau கூறினார்.

இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் எதிர்கால நம்பிக்கை வாக்கெடுப்புகள், வரவு செலவுத் திட்டங்களுக்கு NDP ஆதரவாக வாக்களிக்கும் நிலையை உருவாக்குகிறது.

Liberal கட்சி சிறுபான்மை நிலையில் இருப்பதால், இந்த ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு கூட்டாட்சி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும். தவிரவும் Trudeau அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுறுவது குறித்து கவலைப்படாமல் அரசாங்கத்தின் திட்டங்களை தொடர அனுமதிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய NDP தலைவர் Jagmeet Singh, தனது கட்சி கனேடியர்களுக்கு உதவி பெற தங்கள் பலத்தை பயன்படுத்துவதாகக் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை “அதிகாரத்தை தக்கவைக்க Trudeauவின் கடுமையான முயற்சியைத் தவிர வேறில்லை” என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Berge கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை “கூட்டணி” அல்லது “NDP-Liberal பெரும்பான்மை அரசாங்கம் எனவும் அவர் விவரித்தார்.

ஆனாலும் Liberal அமைச்சரவையில் NDP உறுப்பினர்கள் எவரும் இணையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment