தேசியம்
செய்திகள்

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

Liberals, NDP கட்சிகள் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர்

Justin Trudeau அரசாங்கத்தை 2025 வரை அதிகாரத்தில் வைத்திருக்கும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை இந்த இரு கட்சிகளும் எட்டியுள்ளனர்

இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், நீண்டகால NDP முன்னுரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஈடாக, பிரதமர் Justinவின் அரசாங்கம் 2025வரை ஆட்சியில் இருக்கும் வகையில் அமைந்துள்ளது

கட்சித் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், NDP நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து ஒப்புதலை பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் எதிர்கால நம்பிக்கை வாக்கெடுப்புகள், வரவு செலவுத் திட்டங்களுக்கு NDP ஆதரவாக வாக்களிக்கும் நிலையை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம் “நாடாளுமன்றத்தை செயல்பட வைப்பது” என்ற வகையில் Liberal கட்சியினரால் நோக்கப்படுகிறது.

NDP தலைவர் Jagmeet Singh திங்கள்கிழமை இரவு தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த ஒப்பந்தத்தை விளக்கியதாக தெரியவருகிறது.

Liberal கட்சி சிறுபான்மை நிலையில் இருப்பதால், இந்த ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு கூட்டாட்சி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும். தவிரவும் Trudeau அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுறுவது குறித்து கவலைப்படாமல் அரசாங்கத்தின் திட்டங்களை தொடர அனுமதிக்கிறது.

Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரவு மனப்பான்மையுடன் எதிர்கொண்டுள்ளதாக விவரிக்கப்படுகிறது.

Liberal கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்த 2019 முதல், NDP பெரும்பாலும் அரசாங்கத்தின் பிரதான ஆதரவாளராக இருந்து வருகிறது. அரசாங்கத்தின் முன்முயற்சிகளை ஆதரவாக வாக்களித்தாலும், அந்த ஆதரவு ஒருபோதும் உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தப்படவில்லை.

இறுதியாக 2021ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்த திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு October 2025 இல் நடைபெறும்.

இந்த ஒப்பந்தத்தை “அதிகாரத்தை தக்கவைக்க Trudeauவின் கடுமையான முயற்சியைத் தவிர வேறில்லை” என பிரதான எதிர்க் கட்சியான Conservative கட்சியின் இடைக்கால தலைவி Candice Berge விவரித்தார்.

 

 

Related posts

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Gaya Raja

Funny Boy திரைப்படம் – Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை தவறவிட்டது

Gaya Raja

குடும்ப மருத்துவர் இல்லாமல் Ontarioவில் 2.5 மில்லியன் மக்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment