தேசியம்
செய்திகள்

Conservative தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள்!

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான Scott Aitchison, Marc Dalton ஆகியோர் தலைமைப் போட்டியில் ஈடுபடும் தமது எண்ணத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

49 வயதான Ontario மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Aitchison, 61 வயதான British Columbia மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Dalton ஆகியோருடன் இதுவரை Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மொத்தம் எட்டு பேர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, Brampton நகர முதல்வர் Patrick Brown, நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn Lewis, சுயேச்சை Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber, Saskatchewan தொழிலதிபர் Joseph Bourgault ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த February ஆரம்பத்தில் கட்சி தலைமையில் இருந்து Erin O’Toole வெளியேற்றப்பட்டதை அடுத்து, ஐந்தாண்டுகளில் தங்கள் மூன்றாவது தலைவரை Conservative கட்சியினர் தேர்ந்தெடுக்கின்றனர்.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

Ontario முதல்வரின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது

Lankathas Pathmanathan

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan

Leave a Comment