தேசியம்
செய்திகள்

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள் 2020ஆம் ஆண்டு கனடாவில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கையில் இந்த தரவு வெளியானது.

COVID தொற்றின் முதல் வருடத்தில், கிழக்கு, தென்கிழக்கு ஆசிய கனடியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் முந்தைய ஆண்டுடன்  ஒப்பிடும்போது 301 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் கனடாவில் மொத்தம் 2,669 வெறுப்புக் குற்றங்கள் காவல்துறையில் பதிவாகின.

இது முந்தைய ஆண்டை விட 37 சதவீதம் அதிகமாகும்.

2009 இல் தரவு சேகரிப்பு ஆரம்பித்ததில் இருந்து 2020ஆம் ஆண்டை வெறுப்பு குற்றங்களுக்கான மோசமான ஆண்டாக மாற்றுகிறது.

இவற்றில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 2020ஆம் ஆண்டில் ஏனைய எந்தக் குழுவையும் விட பெரிய அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.

Related posts

Fairview Mall துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Leave a Comment