மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு $15.55 ஆக உயர்கிறது
தற்போது $15 ஆக உள்ள மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April மாதம் 1ஆம் திகதியில் இருந்து $15.55 ஆக அதிகரிக்கும் என வேலைவாய்ப்பு சமூக மேம்பாட்டு அரசு துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம்,மத்திய அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத தொழில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மாகாண குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும்.
இந்த 55 சதக் குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பது 2021ஆம் ஆண்டின் சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் 3.4 சதவிகித அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் British Colombia மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் விரைவில் ஒரு மணி நேரத்திற்கு 45 சதத்தால் உயரும் என அறிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் June மாதம் 1ஆம் திகதி முதல் ஒரு மணி நேரத்திற்கு $15.65 ஆக அதிகரிக்கும் என மாகாண தொழிலாளர் அமைச்சர் Harry Bains கூறினார்.