COVID தொற்றின் காரணமாக கனடாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தொற்றின் காரணமாக மருத்துவ மனைகளின் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது
கடந்த 14 நாட்களில் தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் 4,300 பேர் வரை தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 14 நாட்களில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது
செவ்வாய்க்கிழமை (08) இரவு வரை தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37, 093 என பதிவாகியுள்ளது