தேசியம்
செய்திகள்

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு போராட்டத் தலைவராக கருதப்படும் Pat Kingக்கு வெள்ளிக்கிழமை (25) பிணை மறுக்கப்பட்டுள்ளது.
44 வயதான King மூன்று வாரங்கள் தொடர்ந்த ஆக்கிரமிப்பு போராட்டத்தின்  தலைவர்களில் ஒருவராவர்.
கடந்த வெள்ளிக்கிழமை (18) Ottawaவில் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களைப் போன்ற குற்றங்களை King மீண்டும் செய்வதற்கு கணிசமான வாய்ப்பு இருப்பதாக  நீதிபதி தனது முடிவில் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட மற்றும் ஒரு அமைப்பாளரான Tamara Lichசிற்கு பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் மன்னிப்புக் கோரினார் திருத்தந்தை பிரான்சிஸ்

Lankathas Pathmanathan

Kitchener Centre மாகாண சபை இடைத் தேர்தலில் பசுமை கட்சி வெற்றி

Lankathas Pathmanathan

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

Lankathas Pathmanathan

Leave a Comment