தேசியம்
செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putin, அவரது வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov  மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்காக கனடா அதன் நட்பு நாடுகளின் வழியைப் பின்பற்றி இந்த பொருளாதாரத் தடைகளை விதிக்க  முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டு ரஷ்ய தலைவர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பை கனடா வெளியிட்டது.
உக்ரைனில் நிகழும் அழிவுக்கு இவர்கள் இருவரும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கிறார்கள் இன்றைய  செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Trudeau கூறினார்.

இந்த அறிவிப்பு ரஷ்யாவை குறிவைக்கும் கனடாவின் மூன்றாவது நடவடிக்கையாகும்.

அதேவேளை ரஷ்ய வன்முறையில் இருந்து வெளியேறும் உக்ரைன் அகதிகளுக்கு கனேடிய அதிகாரிகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

எல்லைகளைக் கடந்து அண்டை நாடுகளுக்கு நுழையும் போது ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க கனேடிய அதிகாரிகள்   தயாராக உள்ளதாக அமைச்சர் கூறினார்.

கனடாவில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் உக்ரேனிய சமூகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

Lankathas Pathmanathan

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment