ரஷ்யாவிற்கு எதிராக மற்றொரு பொருளாதார தடையை பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஜனநாயகம், சர்வதேச சட்டம், மனித உரிமைகள், சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வியாழக்கிழமை (24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் விபரித்தார்.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பிரதமர் அறிவித்தார்.
இதில் 58 தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிரான நிதி அபராதம், அனைத்து ஏற்றுமதி அனுமதிகளையும் நிறுத்துதல் ஆகியவையும் அடங்குகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான பயண ஆவணங்களையும் அரசாங்கம் அவசரமாக வழங்குவதாக Trudeau கூறினார்.
கனடாவிற்கு வர விரும்பும் உக்ரேனியர்களுக்கான குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
கனேடியர்கள், நிரந்தரக் குடியுரியாளர்கள், அவர்களது குடும்பங்கள் பாதுகாப்பாக உக்ரேனை விட்டு வெளியேறுவதற்கு கனடிய அரசு போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா ஆகிய நாடுகளுடனான ஏற்பாடுகளை செய்துள்ளது எனவும் Trudeau கூறினார்.
வியாழன் காலை உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyயுடன் பேசியதாக Trudeau கூறினார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படும் என G7 நாடுகளின் கூட்டத்தின் போது Trudeau தெரிவித்தார்.