தேசியம்
செய்திகள்

அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்க்குமா Saskatchewan?

கனடிய அரசின் அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்ப்பது குறித்து Saskatchewan  அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
Ottawa முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் முடிவின் சட்ட சவாலை Saskatchewan பரிசீலித்து வருகிறது.
இதனை முதல்வர் Scott Moeவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

Saskatchewan கட்சி அரசாங்கம் அவசர காலச் சட்டம் மாகாணத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து வருவதாகக் கூறுகிறது.

கடந்த வாரம் மாகாணத் தலைவர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதில் இருந்து முதல்வர் Moe இந்த சட்டத்தை எதிர்த்துள்ளார்.

Alberta முதல்வர் Jason Kenney, தனது ஐக்கிய Conservative அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்தியதை எதிர்த்து நீதிமன்றத்தில் எதிர்ப்பை தாக்கல் செய்யும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Lankathas Pathmanathan

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan

Leave a Comment